கோயமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை – இதமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோயமுத்தூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயமுத்தூரில் கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி…

கோயமுத்தூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயமுத்தூரில் கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் மெல்ல குறைந்துள்ளது. நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்றிரவு சுமார் 9 மணி முதல் இரண்டு மணி நேரம் வரையில் கனமழை கொட்டித் தீர்த்தது.

கவுண்டம்பாளையம், காந்திபுரம், சிவானந்தா நகர், குனியமுத்தூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

கனமழையினால் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.