கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் நுழைந்த காட்டு யானை, இரவு நேரம் ரேசன் கடையை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் மீண்டும் காட்டு யானை புகுந்து இரவு நேரத்தில் ரேஷன் கடையை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கேரளாவில் அவ்வப்போது காட்டு விலங்குகள் ஊருக்குக்குள் புகுந்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மூணார் பகுதியில் உள்ள ரேசன் கடையில் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் பொருட்களை சூறையாடி சென்ற நிலையில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.







