சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை ரீதியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள திட்டங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறைகளுடன் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மதிவேந்தன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் துறை ரீதியாக தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.