சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக, சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளனர். இந்த தகவலை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபடுத்தியுள்ளார்.
அதேபோல், முதலமைச்சரை OLA electric Mobility நிறுவனத்தினர் சந்தித்து பேசிய நிலையில், கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில், அமைந்துள்ள மின் வாகன உற்பத்தி மையம், இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு ஆண்டுக்கு 1 கோடி மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.







