உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2 அனல் மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு, அனல் மின்நிலையம் இயங்க தடை விதித்தது.
இந்த தடை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.







