புதுச்சேரியில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது, முதல் தடுப்பூசியை மருத்துவமனை ஊழியரும், இரண்டாவது தடுப்பூசியை மருத்துவமனையின் உள்ளிருப்பு அதிகாரி முரளியும் போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அடுத்த கட்டமாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட புதுச்சேரி அரசு தயாராக இருப்பதாகவும், இதற்கான தடுப்பு மருந்து விநியோகம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார்.







