“தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ‘CONVERSION CONCLAVE 2026’ மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசியவர், “தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கான பதில் தான் இந்த மாநாடு. ‘CONVERSION CONCLAVE 2026’ மாநாட்டில் மட்டும் 52 நிறுவனங்களின் திறப்பு விழா நடந்துள்ளது. தொழில்துறையில் செய்த சாதனைகளை நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்து முறியடிப்போம்.

ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறுவதை பார்த்து பார்த்து உறுதி செய்கிறோம். தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்குமே இல்லாத ஒன்றை நடத்தி வருகிறோம். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 41 சதவீதமாக உள்ளது. முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று.

கடந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 14.7 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.