மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மார்கழி மழையால், நீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்ததாகவும், அந்த நிவாரணமும் இன்னும் முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பெய்துள்ள கனமழையால், தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 14 மாவட்டங்கள், கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், நீ மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பயிர்க் காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.







