ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதால், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அத்தியூர் மலை கிராமத்தை சேர்ந்த பெரியசாமிக்கும், சடையப்பனுக்கும் அட்டணை கிராமம் அருகே விவசாய நிலங்கள் உள்ளன. அதில், அருகருகே உள்ள தங்களது நிலங்களில், இருவரும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில், இந்த மலைகிராமம் இருப்பதால, இரவு நேரங்களில் யானைகளும், காட்டுப் பன்றிகும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால், பெரியசாமியும், சடையப்பனும் பரண் அமைத்து அதன் பயிர்களுக்கு காவல் இருந்துள்ளனர். இரவு நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை, பெரியசாமியும், சடையப்பனும் விரட்ட முயன்றுள்ளனர். அப்போது யானை தாக்கி பெரியசாமியும், சடையப்பனும் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை விரட்டிவிட்டு, இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.







