முக்கியச் செய்திகள் தமிழகம்

செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது: முதலமைச்சர்

திமுக ஆட்சியில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

செய்தித்துறையின் தமிழரசு இதழ் சார்பாக “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற தலைப்பில் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

இந்த இதழுக்கு வாழ்த்துச் செய்தி எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியின் ஓராண்டு காலம் என்பது தனக்கு மனநிறைவை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது எனவும், அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் வேகமும் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.

இதுபோலவே குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கோயில் வளர்ச்சிக்கான பணிகளை விரைந்து முடித்து சாதனை படைத்து வருகிறார் ஸ்டாலின் என புகழாரம் சூட்டியுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்துக் கட்டுரை எழுதியுள்ளார். அதில், நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து ஒரு இந்தியத் தலைவன் உருவாகிறான் என்ற முணுமுணுப்பு இந்தியாவின் எல்லா தேசிய மொழிகளிலும் கேட்கத் தொடங்கியுள்ளது என பாராட்டியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோ

Jeba Arul Robinson

தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் பதில்

Niruban Chakkaaravarthi

“தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க துணை நிற்பேன்” – பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு

Saravana Kumar