முக்கியச் செய்திகள் செய்திகள்

தீபிகா படுகோனேவை விளம்பரத் தூதராக அறிவித்தது லூயிஸ் வோட்டன்

பிரான்ஸ் நாட்டின் பிரபல ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் வோட்டன் நிறுவனத்தின் இந்திய விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிகு, பத்மாவத் மற்றும் சமீபத்தில் வெளியான கெஹ்ரைன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் தீபிகா படுகோனே நடித்துள்ளார் . பத்மாவத் படம் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

75வது கெனஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலின் நடுவர் குழுவில் உறுப்பினராகவும் இடம்பெற்றிருந்தார். இன்றுவரை இந்திய சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் மற்றும் முன்னணி வெற்றி நடிகைகளில் ஒருவராக உள்ளார் தீபிகா படுகோனே.

இவர் லூயிஸ் வோட்டனுடன் தனது புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார். லூயிஸ் வோட்டன் நிறுவனத்தின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் தீபிகா படுகோனே ஆவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் லூயிஸ் வோட்டன் பிராண்டை தீபிகா படுகோனே பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். மேலும், இந்நிறுவனத்தின் டாபின் விளம்பரப் பிரசாரத்தில் ஏற்கெனவே விளம்பரத் தூதராக இருந்த ஆஸ்கர் விருதுபெற்ற எம்மா ஸ்டோன், ஜோ டாங்யூ போன்றவர்களின் வரிசையில் தற்போது தீபிகா படுகோனேவும் இடம்பெற்றுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தேச பக்தியை நம்பாமல்? நலவாழ்வு திட்டங்களை நம்பும் பாஜக

Arivazhagan CM

வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?

Jeba Arul Robinson

சிறையில் ஊட்டச்சத்து உணவு கேட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார்!