மதுரையில் டாஸ்மாக் வேன் கவிழ்ந்ததில் மதுபானங்கள் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடியது. இதையடுத்து மதுபிரியர்கள் போட்டி போட்டு கொண்டு மதுபாட்டில்களை எடுத்து சென்றனர்.
மதுரை அருகே உள்ள மணலூர் மதுபான குடோனில் இருந்து மதுரை மாநகருக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது சரஙக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் ரோட்டில் உடைந்து மதுபான ஆறாக ஓடியது. இதையடுத்து அந்த சாலையில் சென்ற மதுபிரியர்கள் ஓடோடி வந்து போட்டி போட்டுக்கொண்டு சிதறி கிடந்த மது பாட்டில்களை எடுத்து சென்றனர். மாலை நேரம் என்பதால் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த சிலைமான் போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement: