“திமுகவின் தேர்தல் பரப்புரை அவதூறு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது” : முதல்வர் பழனிசாமி

பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து, கீழ்கட்டளையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது, முதலமைச்சராகிய தன்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் சந்திக்கலாம் என்றும், ஆனால் மு.க.ஸ்டாலினை சந்திக்கமுடியுமா? என்றும்…

பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து, கீழ்கட்டளையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார்.

அப்போது, முதலமைச்சராகிய தன்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் சந்திக்கலாம் என்றும், ஆனால் மு.க.ஸ்டாலினை சந்திக்கமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்

முன்னதாக, சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, வேளச்சேரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும், எனும் உயரிய நோக்கோடு, வலிமையான கூட்டணியை தாங்கள் உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியின்போது செய்த சாதனைகளைப் பற்றி பேசியே, தாங்கள் வாக்கு கோருவதாகக் கூறிய முதலமைச்சர், ஆனால், திமுகவின் பிரச்சாரம், அவதூறு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.