ஜிபே மூலம் ஓட்டுக்கு பணம் வழங்க திட்டமா?: தேர்தல் ஆணையத்தில் புகார்

தமிழகத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் ஜிபே (gpay) போன்ற பண பரிவர்த்தனை செய்யும் செயலிகளின் மூலமாக வாக்களர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் எழுந்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 6 ஆம்…

தமிழகத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் ஜிபே (gpay) போன்ற பண பரிவர்த்தனை செய்யும் செயலிகளின் மூலமாக வாக்களர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் எழுந்துள்ளது.

வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் வாக்களர்களுக்கு ஜிபே (gpay), பேடிஎம் (paytm),ஃ போன்பே (phonepay) மூலமாக பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக

தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.