கூகுள்பே மூலம் பணம் கொடுத்தால் நடவடிக்கை: சத்ய பிரதா சாகு

வாக்காளர்களுக்கு கூகுள்பே மூலமாக பணம் கொடுப்பதாக சரியான ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் (gpay,…

வாக்காளர்களுக்கு கூகுள்பே மூலமாக பணம் கொடுப்பதாக சரியான ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் (gpay, paytm மற்றும் phonepay) போன்ற பண பரிவர்த்தனை செய்யும் செயலிகளின் மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட உள்ளது என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய சத்ய பிரதா சாகு, “கூகுள் பே மூலமாக பணம் கொடுப்பதாக சரியான தகவல்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பரிசு கூப்பன்கள் கொடுப்பதாக சிவிஜில் செயலி மூலமாக 96 புகார்கள் வந்துள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ஆ ராசா அளித்த விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்றும் சத்யபிரதா சாகு கூறினார்.
தன்னுடைய புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என புகார் அளித்துள்ள மதுரை வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.