விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் தேசிய செட்டியார் பேரவை மாநில மாநாடு நடைபெற்றது அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை…

விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் தேசிய செட்டியார் பேரவை மாநில மாநாடு நடைபெற்றது அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய முதல்வர், அனைத்து சமூக மக்களும் மேம்பட ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். செட்டியார் சமூக மக்கள் அதிமுகவுக்கு என்றென்றும் பக்கபலமாக இருப்பதாக கூறிய அவர், விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும், நீர் மேலாண்மைக்கும் அதிமுக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பெரியகுளம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற்றதற்கு செட்டியார் சமூக மக்களின் வாக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக பெருமிதம் தெரிவித்தார். மாநாட்டின் நிறைவாக தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வெள்ளி செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.