செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பல்வேறு படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது இணையத்தில் வலம் வருகின்றன. சில இடங்களில் இவை வரம்பு மீறவும் செய்கின்றன. இதனால் டீப்ஃபேக்குகள் மற்றும் தவறான தகவல்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
இதனை முறைப்படுத்தும் முயற்சியில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமைச்சகம், டிஜிட்டல் ஊடக நெறிமுறைகளின் வரைவு விதிகளை கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. அதில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொலிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) லேபிள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதை குறிக்கும் இந்த லேபிள்கள் தெளிவாக தெரிவதில்லை என்றும் content-கள் பதிவிடப்பட்ட சிறிது காலத்திற்குள் அவை மறைந்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் அல்லது காணொலியில் AI லேபிலானது தெளிவாகவும் அந்த content-ன் முழு காலத்திற்கு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த புதிய விதிகள் குறித்த கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 29-ஆம் தேதியிலிருந்து மே 7-ஆம் தேதிக்கு அமைச்சகம் நீட்டித்துள்ளது.







