காணொலிக்கான இணைப்புகளைப் பகிர உச்சநீதிமன்றம் இனி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிவந்துள்ள சுற்றறிக்கையில், வாட்ஸ்அப் செயலிக்கு பதிலாக, நீதிமன்ற விசாரணைகளுக்கான இணைப்புகள் அனைத்தும் வக்கீல்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலிலும், மொபைல் எண்களிலும் பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மார்ச் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூக வலைத்தளங்கள் அனைத்திற்கும் புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கட்டமைப்பதின் முதல் பகுதியாக உச்சநீதிமன்றத்தில் வாட்ஸ்அப் செயலியை திவிர்க்கும் முடிவு அமைந்துள்ளதாக சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.