புகைப்படுத்துதல் என்பது ஒரு உலகலாவிய பிரச்சனையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முயற்சியை மேற்கோண்டு வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் புகைப்பிடித்தலை கட்டுப்படுத்த ஒரு புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றமானது, புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இங்கிலாந்தில் 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பின் பிறந்தவர்களுக்கு புகையிலை மற்றும் சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்வதை இச்சட்டம் சட்டவிரோதமாக்குகிறது. இது ஐக்கிய ராஜ்ஜியத்தின் நான்கு அங்க நாடுகளான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றில் அமலுக்கு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதற்கான வயதை இந்த சட்டம் படிப்படியாக உயர்த்துகிறது. இதன் மூலம் நாட்டில் புகைப்பைடிக்காத ஒரு தலைமுறைய இந்த சட்டம் உருவாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.







