தமிழ் நாடு அரசின், ‘டாஸ்மாக்’ கடைகளில் சராசரியாக தினமும், ரூ. 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகின்றன. வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் இந்த விற்பனை அதிகரிக்கிறது. விடுமுறைக்கு முந்தைய நாளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் மது வாங்குவதே இதற்கு காரணம்.
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெற உள்ளது. சட்ட ஒழுங்கு மற்றும் வாக்காளர்களுக்கு மது விநியோகத்தை தடுத்தல் ஆகிய காரணங்களுக்காக ‘டாஸ்மாக்’ கடைகள் நேற்று மூடப்பட்டன. நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாளே டாஸ்மார்க் கடைகள் திறக்க வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினமே மது பிரியர்கள், அதிகளவில் மது வாங்கி குவித்தனர். இதனால், அன்று ஒரே நாளில் மட்டும், ரூ. 350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







