சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல், போக்குவரத்து மாற்றம்

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னையிலும் பெய்து…

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னையிலும் பெய்து வரும் கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பல்வேறு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகள் மூடல்

வியாசர்பாடி சுரங்கபாதை, கணேஷ்புரம் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கபாதை, கெங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, பழவந்தாங்கல் சுரங்கபாதை, தாம்பரம் சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, வில்லிவாக்கம் சுரங்கபாதை, காக்கன் சுரங்கபாதை,

கே.கே நகர் – ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் -டாக்டர் சிவசாமி சாலை, ஈ வி ஆர் சாலை காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம் – ஜவஹர் நகர் , பெரவள்ளுர் -70 அடி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் பட்டாளம் மணி கூண்டு, வியாசர்பாடி-முல்லை நகர் பாலம் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

திருமலைப் பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால் – பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

போக்குவரத்து மாற்றம்:

பெரம்பூர் பேரக்ஸ் சாலை, அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகரப் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகரப் பேருந்துகள் பிரிக்கிளின் ரோடு ஸ்டிராஹன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும். புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ் ரோடு, பிரிக்கிளின் ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.