இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய…

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையே நோக்கி நகர்ந்து, இன்று மாலை காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.