29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்து

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 பன்னாட்டு விமான நேரங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி கடலூா்- ஶ்ரீஹரிகோட்டா இடையே இன்று கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதாக புறப்பட்டு வந்தன. எந்த விமானமும் ரத்துச் செய்யப்படவில்லை. ஆனால் நேற்று மாலை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலை 4.10 மணிக்கு மதுரைக்கு 40 பயணிகளுடன் செல்ல இருந்த விமானம், இரவு 7.55 மணிக்கு திருச்சிக்கு 41 பயணிகளுடன் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டன. அதுபோல் இரவு 7.30 மணிக்கு மதுரையில் இருந்து 74 பயணிகளுடனும் இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து 34 பயணிகளுடன் வர வேண்டிய 2 விமானமும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி மும்பை, ஷார்ஜா, துபாய் உட்பட 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சாா்ஜாவில் இருந்து நேற்றிரவு 8.55 மணிக்கு 154 பயணிகளுடன் சென்னை வர வேண்டிய ஏர் அராபியா விமானமும், இரவு 9.35 மணிக்கு 127 பயணிகளுடன் சாா்ஜா புறப்பட்டு செல்ல வேண்டிய அதே விமானமும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் நள்ளிரவு 2.15 மணிக்கு துபாயில் இருந்து வந்துவிட்டு, அதிகாலை 3.20 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், சார்ஜாவில் இருந்து அதிகாலை 3 மணிக்கு வந்துவிட்டு 4 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், காலை 8 மணிக்கு வந்து காலை 10 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய விமானம் என 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் துபாயில் இருந்து சென்னைக்கு வந்து திரும்பி செல்ல வேண்டிய விமானம், லண்டனில் இருந்து வந்து செல்ல வேண்டிய விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பக்ரைனில் இருந்து வர வேண்டிய விமானம் 12- ஆம் தேதி காலை 5 மணிக்கு வந்து விட்டு காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு அதிகமானால் மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறிய ரக விமானங்கள் பலத்த காற்று மற்றும் மழையினால் இயக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் அவற்றை ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் சரியும் நீட் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை

Halley karthi

முழு ஊரடங்குக்கு அவசியமில்லை: தமிழக அரசு!

Ezhilarasan

”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya