பாக்கெட் மணிக்காக சண்டை? அப்பாவின் துப்பாக்கியால் சுட்டு மாணவர் உயிரிழப்பு

துப்பாக்கியால் சுட்டு பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பகத் சிங். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர்.…

துப்பாக்கியால் சுட்டு பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பகத் சிங். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான
இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். கடந்த 20 வருடமாக பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து
வருகிறார். இவர் மகன் ராகுல் பண்டாரி (17). இவர் நேற்று காலை பெங்களூரில் உள்ள
இந்திய விமானப்படை தலைமை அலுவலகம் அருகே நடைபாதையில் ரத்த வெள்ளத்தில்
உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். அதன் அருகில் கிடந்த கைத்துப்பாக்கி, பெல்ட், செல்போன் ஆகியவற்றையும்  கைப்பற்றிய போலீசார் விசாரித்தனர்.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது ராகுல் பண்டாரி என்பதும் அப்பாவின் துப்பாக்கியால் சுட்டுஉயிரை மாய்த்துக்  கொண்டதும் தெரியவந்தது. பிளஸ் டூ மாணவரான ராகுல் பண்டாரி, நன்றாக படிப்பவராம். காலையில் படிப்பதற்காக எழுந்துள்ளார். அப்பாவிடம் 500 ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. தரமறுத்து அவர் திட்டி னாராம்.

இதனால் மனம் உடைந்த ராகுல், அப்பா வைத்திருந்த துப்பாக்கியை அவருக் குத் தெரியாமல் எடுத்து வந்து நெற்றியில் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். நெற்றி யில் பாய்ந்த துப் பாக்கிக் குண்டு மண்டையை துளைத்து மறுபக்கமாக வெளிவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.