தொழில்நுட்பம் லைப் ஸ்டைல் செய்திகள்

ஆண்கள் ஏன் பேஸ்புக்கில் Profile Lock செய்கிறார்கள்?

தமிழ்நாட்டின் பிரபலமான ஆன்லைன் மோசடி என்றால் ஒரு காலகட்டத்தில்… சார் State Bank of india மேனேஜர் பேசுறேன் சார்..உன் கார்டு ரினிவல் பண்ணணும் சார்.. ’கார்டு மேல இருக்க அந்த 16 நம்பர் சொல்லு சார்’ என்ற அந்த வசீகரமான  குரலை யாராலும்  எளிதில் மறந்து விட முடியாது. பலர் அதில் பாதிக்கப்பட்டாலும், பலர் பங்கமாக கலாய்த்தும்விட்டனர். தற்போது ஆன்ராய்டு போன்களும், பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த சூழலில் மற்றும் ஒரு நூதன திருட்டு கும்பல்கள் களமிறங்கியுள்ளது.

திருட்டு முறை

பேஸ்புக்கில் எதாவது ஒரு அக்கவுண்ட்டை தேர்வு செய்கிறார்கள். பின்பு அவர்கள் பதிவு செய்த புகைப்படம் அனைத்தையும் எடுத்து அவர்கள் பெயரிலேயே புதிய அக்கவுண்டை பேஸ்புக்கில் ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து அந்த அக்கவுண்ட்டில் உள்ள அவர்களது நட்புகள் அனைவருக்கும் நட்பு அழைப்பு விடுக்கிறார்கள். நண்பர்களும் தெரியாமல் Accept செய்து விடுகிறார்கள்.

சம்பவங்கள்

பிறகு அந்த நண்பர்களின் உள்பெட்டி(Inbox) சென்று Hi என்று அனுப்பிய அடுத்த நிமிடமே Do You have Google Pay என ஆரம்பிக்கிறார்கள். Had to transfer some money to friend will you எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது லட்சக்கணக்கில் கிடையாது. அதிகபட்சமாக 5,000 ரூபாய்தான் கேட்பார்கள் ஏனென்றால் பெரும் தொகை என்றால் மாட்டிக் கொள்வார்கள். மாறாகச் சிறு சிறு தொகையாக 5 அல்லது 6 நபரிடம் பெற்றால் அவர்கள் நினைத்த தொகை கிடைத்து விடும். சிலர் ரூ100, 200 கூட கேட்கிறார்கள் அந்த நண்பர்களும் 100, 200 தானே என அனுப்பி விட்டுவிடுகிறார்கள். அதைப் போய் திரும்பக் கேட்கவும் மாட்டார்கள். கண்டுபிடித்தாலும் ரூ100, 200 போய் காவல்துறையில் புகாரா? என விட்டு விடுவார்கள். ஏனென்றால் காவல் நிலையத்திற்குச் சென்றால் லட்சக்கணக்கான இம்மாதியான வழக்குகள் நிலுவையில் இருக்கும்.

சிக்கியது எவ்வாறு?

சில மாதங்களுக்கு முன்பு இந்த கும்பல் ரேண்டமாக எல்லோர் பெயரிலும் அக்கவுண்ட்டை உருவாக்கி பணம் கேட்டு வந்தார்கள். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி பெயரிலும் அக்கவுண்ட்டை உருவாக்கி பணம் கேட்ட போதுதான் இவ்விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. பின்புதான் நம்ம ஊர்க்காரகள் சும்மா இருப்பார்களா? Do You have Google Pay என்று கேட்ட உடனே ‘நீ வாங்குன காச மொத கொடு’, ’இங்கிலிஷ் தெரியாது’என பங்கமான வார்த்தைகளால் மோசடி கும்பல் மனம் நோகடிக்க செய்ய தொடங்கிவிட்டனர். தற்போதும் விஷயம் தெரியாமல் சிலர் ஏமாற்றப்பட்டுக் கொண்டும்தான் உள்ளனர். டெக்னானாலஜி வளர வளர அனைத்து விஷயங்களையும் நாம் இணைய வழியே பகிர்ந்து கொள்கிறோம். எவ்வளவு Security களை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களது தகவல் இந்த நிமிடம் வரை திருடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நேரடியாகச் சந்திப்பதும், உரையாடுவதுமே சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஒரு வழி. உதாரணத்திற்கு இணையத்தில் நீங்கள் எதாவது ஒரு பொருளைத் தேடினால் அடுத்த நிமிடம் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் அது சம்மந்தமான விளம்பரங்கள் வந்து நிற்கும்.

பொதுவாகப் பெண்கள் தங்களின் பாதுகாப்பு கருதி Profile Lock செய்வது வழக்கம். ஆனால் தற்போது ஆண்களும் Profile Lock செய்வது இக்காரணங்களுக்காகவே, ’இருக்கிற பிரச்சனையில இது வேறயா’ என சிவனேனு Profile Lock செய்து வைப்பது நிம்மதி என அதனை தற்போது கடைபிடித்து வருகின்றனர்.

– மா.நிருபன் சக்கரவர்த்தி

Advertisement:
SHARE

Related posts

அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்!

எல்.ரேணுகாதேவி

மதுக்கடையில் இனி ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

Niruban Chakkaaravarthi

வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜா

Halley karthi