2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழா

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்காமல் இருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது வருடந்தோரும் வெகு விமர்சியாக நடைபெறும்.…

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்காமல் இருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது வருடந்தோரும் வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக கொரோனா பரவத் தொடங்கிய 2020ம் ஆண்டில் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த சம்பவம் மதுரை மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முறையாக நடைபெறாத மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விழாவில் மிகமுக்கிய நிகழ்வான கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சியாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கொடியேற்றம் வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து 12ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 14ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 15ம் தேதி திருத்தேரோட்டம், 16ம் தேதி ,கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் போன்றவை நடைபெற உள்ளது. முன்னதாக சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.