முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டெல்டா மாவட்டங்களை கண்ணின் இமைபோல காப்போம்; அமைச்சர் உறுதி

டெல்டா மாவட்டங்களை கண்ணின் இமைபோல காப்போம் என சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் தேசிய மாணவர் படையினர் நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் கலந்துகொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தேசிய மாணவர் படையினருக்கு தேவையான உட்கட்டமைப்பு பணிகளை, அதிகபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய மாணவர் படையினர் பயிற்சி பெற மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மதுரையில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற மையம் செயல்பட்டு வருகிறது. தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். சீனியர் மகளிர் கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்றதற்காக பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதுவும் விரைவில் வழங்கப்படும். ஒலிம்பிக் அகாடமிகள் 4 மண்டலங்களில் துவங்க, அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. தமிழக விளையாட்டு வீரர்களுக்கான குறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிவிப்பதற்கான தகவல் மையம் விரைவில் துவங்கப்படும்” என்றார்.

திமுக ஆட்சியமைத்த மே மாதம் 7ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மண்ணை மலடாக்கும் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று பேசிய அமைச்சர், நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என முதலமைச்சர் தெரிவித்தார். அதேபோல கண்ணின் இமை போல காப்போம் என அமைச்சர் மெய்யநாதனும் உறுதியாக தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன்

EZHILARASAN D

கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு

நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

EZHILARASAN D