தென்னிந்திய மாணவர்கள் புறக்கணிப்பு?: எம்பி கார்த்திக் சிதம்பரம்

உக்ரைன் மாணவர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் , ஐந்து மாநில சட்டப்பேரவைத்…

உக்ரைன் மாணவர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் , ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்தது குறித்த கேள்விகளை எழுப்பியபோது, ஐந்து மாநில சட்டப்பேரவைத் வெளியாகும் கருத்துகணிப்புகளை வைத்து எந்த முடிவுக்ககும் வர முடியாது என பதிலளித்தார்.


ரஷ்யா- உக்ரைன் போரால் அங்கு தவித்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். உக்ரைனில் மருத்துவம் படிக்க செலவு குறைவு என்பது மட்டுமின்றி நமது நாட்டில் மருத்துவ இடங்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்க மாணவர்கள் வாங்கிய கல்வி கடன்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது திருப்பி செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், உக்ரைனில் தவித்து வந்த மாணவர்களை மீட்கும்போது தென்னிந்திய மாணவர்கள் புறக்கணிப்பட்டதாக எழுந்த புகார் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.