மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள், பைனாகுலர் பயன்பாடு கொண்ட கண்காணிப்பு டவர்களை மதுரை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
குற்ற செய்கைகளில் ஈடுபடும் நபர்களை FACE RECOGNITION SOFTWARE என்ற செல்போன் செயலி மூலம் கண்டறியும் வசதி பாதுகாப்பு அலுவலில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 3500 காவல்துறையினர் மதுரை மாநகரத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

பக்தர்கள் உதவி தேவைப்பட்டால் கோயிலின் உள்ளே செயல்பட்டு வரும் காவல் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்ணை 83000-17920 தொடர்பு கொள்ளலாம். மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியும், வைகை ஆற்றில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை சுற்றியும் நிறுவப்பட்டுள்ள MAY I HELP YOU BOOTH களையோ கண்காணிப்பு டவர்களில் உள்ள காவலர்களை அணுகலாம்.
மதுரை மாநகராட்சியும், மதுரை மாநகர காவல்துறையும் இணைந்து ‘மாமதுரை” என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்து, அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சிகள், ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் சாமி சென்று கொண்டிருக்கும் இடத்தினையும் உடனுக்குடன் (PRESENT LOCATION ) தெரிந்து கொள்ளலாம் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.







