முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் விளாசினார். ஷிவம் துபே 46 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரூ அணி களமிறங்கியது. இறுதியில், பெங்களுரு அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி துவங்க வலியுறுத்தி போராட்டம்- அண்ணாமலை

G SaravanaKumar

போலி சான்றிதழ் விவகாரம்: மேல் முறையீடு செய்ய ’அம்பானி’ நடிகை முடிவு!

EZHILARASAN D

‘உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

Arivazhagan Chinnasamy