கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 22,775 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அப்படி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ வேண்டுமென மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
அதன் முடிவில், கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும் எனவும், 18 வயது நிறைவடையும்போது அந்தத் தொகை வட்டியுடன் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனை வரவேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் காக்க கண்மணிகளைக் காப்போம் என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாக கடந்த 20ஆம் தேதி கோரிக்கை வைத்திருந்தேன் என்று நினைவுகூர்ந்தார். மேலும், குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன், அதனை பாராட்டுகிறேன் எனவும் கூறியுள்







