செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை!

மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார மையத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த கீழக்குயில்குடி ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி ரமேஷ் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை ஜானுஸ்ரீ அங்கு விளையாடி கொண்டிருந்தது.

குழந்தை விழுந்த கழிவுநீர் தொட்டி

அப்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்துள்ளது. அந்த கழிவுநீர் தொட்டியில் மழைநீர் தேங்கி இருந்ததால், குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர், அந்த தொட்டியில் குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குழந்தை இறந்தது எனவும், சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 2,775 பேருக்கு கொரோனா

Ezhilarasan

திமுக என்றாலே மன்னர் ஆட்சிதான்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Halley karthi

ஹோலிக்கு வாழ்த்து சொன்ன கமலா ஹாரிஸ்!

Gayathri Venkatesan