முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

திரைப்பட வரிவிலக்கு குழு அமைப்பதில் விதிமீறல் இருந்தால் ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் குழு அமைப்பதில் விதிமீறல்கள் இருந்தால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத் தியுள்ளது.

தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், தங்களது திரைபடங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதாக, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தங்களது நிறுவனம் தயாரித்த படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிந் தாலும், வரி விலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமே வரி விலக்கு அளிப்பதில் பாகுபாடு காட்டபடுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், திரைப்பட வரிவிலக்கு குழு அமைப்பதில் விதிமீறல்கள் இருந்தால் அதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார். மேலும், கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாத, ஊழலற்ற நியமனங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதற்காக குழு அமைப்பது தொடர்பான ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்பு

Halley karthi

யாஷிகாவின் கலைப்பயணத்தை தடுமாறச் செய்த விபத்து

Saravana Kumar

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

Jayapriya