மகேந்திர சிங் தோனியின் புதிய கெட்டப் இணையதள வாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. ரவுடி ராத்தோர் படத்தில் அக்ஷய் குமார் வைத்திருப்பதுபோல ஒரு மீசையை அவர் வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் ஐபிஎல் 2021 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தல அஜித் போல சால்ட் & பெப்பர் கெட்டப்பில் தோனி இருக்கிறார். வெள்ளை தாடியும், கருப்பு மீசையுமாக தோனி மிகவும் வசீகர தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மேலும் ரவுடி ராத்தோர் படத்தில் அக்ஷய் குமார் வைத்திருப்பதுபோல் அவரும் மீசை வைத்திருக்கிறார்.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி தல தோனி அவரது 40 வது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்களுடனும், மனைவி சாக்ஷி மற்றும் குழந்தை ஷிவாவுடனும் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைராகி வருகிறது.








