முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

முதலமைச்சரின் புத்தக வெளியீட்டு விழா: கேரள முதலமைச்சருக்கு அழைப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கேரள முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின் இறுதி நாள் வாக்கு சேகரிப்பிற்காக காணொளி காட்சி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தன் வரலாற்றை நூலை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அதே போல சென்னை புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட போது தனது அரசியில் பயணத்தை நூலாக வெளியிடுவதாகவும், கவிஞர் வைரமுத்துவும், இனமான நடிகர் சத்யராஜும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்பாற்கள் என்று தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலும் ‘உங்களில் ஒருவன்’ எனத் தலைப்பிடப்பட்ட அந்த புத்தகத்தில் 1976 வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை பற்றி எழுதியிருப்பதாக கூறிய அவர் , முதல் பாகமாக வெளிவரும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி வர்த்தக மையத்தில் நடைபெற இருப்பதாகவும், புத்தகத்தை காங்கிரஸ் தலைர்களில் ஒருவரான ராகுல் காந்தி வெளியிடுவார் எனவும் தெரிவித்திருந்தார்.


இந்த புத்தக விழாவிற்கு முதல் மந்திரி உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ,ஆகியோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும், எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக எம்பி டிஆர் பாலு நேரில் சந்தித்து புத்தக வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D

அண்ணாத்த இறுதிகட்டப் படப்பிடிப்பு: ரஜினி நாளை மேற்கு வங்கம் பயணம்

Vandhana

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” – பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்