வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் 4வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், அரசியல் ஆதாயத்திற்காகவே, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தமிழகத்தில் உள்ள மறவர் உள்ளிட்ட பிற சமூக பிரிவு மக்களை ஒப்பிடும்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் முன்னணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளிலும் வன்னிய சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாகவும் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
மேலும் வன்னியர் சமுதாயத்துக்கு ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த அம்பாசங்கர், ஜனார்தனன், தணிகாச்சலம் ஆகியோர் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.