முதலமிச்சர் விஜய் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 14.9.2026 அன்று இங்கிலாந்து, இலண்டனில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான ‘சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்’ (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்தணர்வு ஒப்பந்தம்
பிரிட்டனைத் (UK) மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் (Ernst & Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி முதலீடு செய்திட விருப்பக் கடிதம்
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




