‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். மேலும் முலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய்க்கு , எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவி, “தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.