முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்…!

முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்படுகிறார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பானை இல்லாததால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவு மூலம் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.

முதலமைச்சராக பதவியேற்ற விஜய், தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மு.க. ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், அன்புமணி, சீமான், காதர் மொகிதீன் உள்ளிட்டோரை அவர்கள் வீட்டிற்கே சென்று விஜய் சந்தித்தார்.

முதலமைச்சர் விஜயின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் அவர் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.