கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் கம்பெனிக்கு, கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டைல் லிமிடெட் என்னும் கம்பெனி எந்த வித சேவையும் பெறாமல் பெரும் தொகையை வழங்கியதாக கூறப்படுகிறது. இது சட்டவிரோத பணம் என்று குற்றசாட்டு எழுந்தது.
அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ஆனால் அமலாக்கத்துறையின் விசாரணையை ரத்து செய்ய கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில் இன்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லம் உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. கோழிக்கோட்டில் முன்னாள் அமைச்சரும் வீணாவின் கணவருமான பி.ஏ. முகமது ரியாஸின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.







