2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இன்று பெரம்பூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதற்காக பெரம்பூர் தொகுதிக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனயடுத்து வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து, எம்.எல்.ஏ இருக்கையில் அமர்ந்து, கோப்புகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், பணிகளை ஆய்வு செய்தார். மேலும் இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.




