தங்கம் விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று (நவம்பர் 11) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45-ம் சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,210 க்கும். ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,120-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1920 குறைந்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வந்தது. இன்று வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.5-ம் ஒரு கிலோவுக்கு ரூ.5000-ம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.