முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிகரெட் லைட்டர்கள் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்யகோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
தென் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் கலந்துரையாடி, தொழிலாளர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர், மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின்  விளைவாக, தொழில்துறை தனது உள்நாட்டு சந்தையையும் வேகமாக இழந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தீப்பெட்டி தொழில் ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருமுறை மட்டும்  பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படுவதோடு,  சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்கிறது. இதனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் ஒளியர்களின் இறக்குமதியை உடனடியாகத் தடைசெய்வதோடு, சட்டவிரோத இறக்குமதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
– மாரித்தங்கம் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையவில்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

EZHILARASAN D

பக்தர்களின்றி நடைபெறும் மீனாட்சியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி!

Halley Karthik

தமிழக சுகாதாரத்துறையுடன் கைகோர்க்கும் யுனிசெஃப்

G SaravanaKumar