கிராமப்புறங்களில் அவசர சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு CIPACA நிறுவனம் பரிசு வழங்கி சிறப்பித்துள்ளது.
கிராமப்புற மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வழங்குவதற்கான பாடத்திட்டம் இங்கிலாந்து பல்கலைக் கழகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புற மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவைத் தொடங்கி, உபகரணங்கள் வழங்கி வரும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான CIPACA நிறுவனம் சார்பில், சென்னை சோழிங்கநல்லூர் தனியார் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியில் CIPACA நிறுவனத்தின் தலைவர் ராஜா அமர்நாத், IMA தேசிய தலைவர் டாக்டர் அன்பரசு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரின் முன்னாள் ஆலோசகர் ஸ்ரீ அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த காலேஜ் ஆஃப் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ICU பராமரிப்பு முதுநிலைப் படிப்பை வழங்குவதற்கான ஒப்பந்தம் இந்த நிகழ்ச்சியில் கையெழுத்தானது. மேலும் மருத்துவ சேவை தொடர்பான தகவல் தொழில்நுட்ப உதவிக்காக டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் கிராமப் பகுதிகளில் சிறப்பாக சேவையாற்றிய ஐந்து மருத்துவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
-இரா.நம்பிராஜன்