முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் கோவை வரவேண்டும்: வானதி சீனிவாசன்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்திற்கு கௌரவம் பார்க்காமல் வந்து கோவை மக்களை சந்திக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனி தெரிவித்துள்ளார்.

கோவையில் சிலிண்டர் வெடித்த இடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பாஜக தேசிய
மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், சிலிண்டர் வெடித்து பயங்கரவாத தாக்குதல் நடத்தும் முயற்சி இறைவன் அருளால் தடுக்கப்பட்டுள்ளது. நுற்றுகணக்கான மக்களை கொல்லும் சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு, செயல்களுக்கு கூட கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் யாரும் கோவை வர வில்லை. கோவை மக்களுக்கு இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்த்த வந்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போலீஸ் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இடத்தை பார்க்கக் கூட வராது கண்டனத்திற்குரியது. கோவையை இன்னும் பழி வாங்கும் நோக்குடன் முதல்வர் இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது என தெரிவித்தார். உளவுதுறை முழுவதும் செயல் இழந்திருக்கின்றது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர் என தெரிவித்தார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்வர்
கவுரவம் பார்க்க கூடாது. சர்தேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். முதல்வர் மற்றும் சில முக்கிய அமைச்சர்களை மேடையில் வைத்துக் கொண்டு இந்த ஆட்சி மைனாரிட்டி மக்கள் போட்ட பிச்சை என கூறுகின்றனர். மைனாரிட்டி ஓட்டுக்காக பிற மக்களின் உயிரை பலி கொடுக்க போகின்றாரா முதல்வர்? என விமர்சித்த வானதி பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கூட முதல்வர் பேச வில்லை. திருமாவளவன், சீமான், கம்யூனிஸட் கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில்  அமைதியாக இருக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் இந்த விஷயத்தில் கௌரவம் பார்க்காமல் கோவைக்கு வர வேண்டும். கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். காவல் துறைக்கும் உளவுத்துறைக்கும் சரியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஓட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். இப்போது மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் களத்தில் இறங்க வேண்டும் எனவும், மத்திய அரசின் அரசியலுடன் மோதங்கள் மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள் எனவும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram