முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

7 பேர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

’அந்த தீர்மானத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பியதையும்- “அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்திருப்பதையும்” சுட்டிக்காட்டி 19.5.2021 அன்று குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார்.

’மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள்; உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து – ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இன்று நேரில் அளித்துள்ளார்.

Advertisement:

Related posts

மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!

Nandhakumar

விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!

Gayathri Venkatesan

நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

Jeba