சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 58 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 58 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தி வருகிறது. இதையடுத்து, அப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல்,  ஊழல் புகார்கள்,  முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் என ஏற்கனவே இருந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 58 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தகுதியில்லை என்ற அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தகுதிக் குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்பட்டு,  முறையாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுவர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.