புதிய கல்வி அமைச்சர் நியமனம் – பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு!

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து உண்வுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொருப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் மறு தேர்வால் உயி*ழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக இன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் அளித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்வி அமைச்சரை நியமித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.