முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: 3வது நாளிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3வது நாளிலும் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இரு பிரிவிலும் 6 அணிகளுக்கு எதிரான இந்திய அணி வெற்றி பெற்றது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது கிரீஸை எதிர்த்து விளையாடியது. இந்திய ஏ அணியில் ஹரிகிருஸ்ணா பென்டாலா, விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகைசி, சசிகிரண் ஆகியோர் இடம்பெற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹரிகிருஷ்ணா – டிமித்ரியோஸ் உடன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி, 44வது நகர்வில் வெற்றி பெற்றார். விதித் குஜராத்தி – நிக்கோலஸ் உடன் கருப்பு நிற காய்களுடன் விளையாடி 30வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது. . அர்ஜூன் எரிகைசி – மஸ்ட்ரோவாசிலிஸ் உடன் வெள்ளை நிற காய்கள் கொண்டு விளையாடி, 51 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். சசிகிரண் – லோனிடிஸ் உடன் கருப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடி 51 வது நகர்வில் டிராவில் முடித்தார்.

இந்திய ஓபன் B அணி தனது 3வது சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியில் குகேஷ், சரின் நிஹில், பிரக்ஞானந்தா, ரவுனக்சத்வானி இடம்பெற்றனர். குகேஷ் – நிகோவுடன் கருப்பு காய்களை கொண்டு விளையாடி 37வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நிஹில் சாரின் – செபாஸ்டின் உடன் வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடி 27வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா – யானிக்குடன் கருப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடி 66வது நகர்வில் வெற்றி பெற்றார். ரவுனக் சத்வாணி – ஃபாபியன் உடன் வெள்ளை காய்களைக் கொண்டு விளையாடி 38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்,

இந்திய ஓபன் சி அணி, ஐஸ்லாந்து அணியுடன் விளையாடி 3 புள்ளிகளில் வெற்றி பெற்றது. சூர்ய சேகர் கங்குலி – ஜோர்வார் ஸ்டெயின் உடன் வெள்ளை நிற காய்களை க்கொண்டு விளையாடி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சேதுராமன் – ஹான்ஸ் உடன் கருப்பு காய்களைக் கொண்டு விளையாடி 36 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அபிஜித் குப்தா – குட்மண்டூர் உடன் வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடி 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அபிமன்யு புரானிக் – கிரிட்டர்சன் உடன் கருப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடி ஆட்டம் டிராவில் முடிவுக்கப்பட்டது.

இந்திய மகளிர் A அணி, இங்கிலாந்து அணியுடன் மோதி 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ஹரிகா – ஜோவன்கா ஹவுஸ்கா உடன் கருப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடி 40வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது. வைஷாலி – டோமா உடன் வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடி 65 வது நகர்வில் வெற்றி பெற்றார். தான்யா சச்தேவ் – யாவ் லான் உடன்கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடி 51 வது நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடித்தார். பாக்தி குல்கர்னி – அக்‌ஷயா உடன் வெள்ளை நிற காய்களைக் கொண்டு 59 வது நகர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றார்.

இந்திய மகளிர் B அணி, இந்தோனேசியா உடன் மோதி 3 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. வந்திகா அகர்வால் – ஐரின் கரிஷ்மா உடன் கருப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடி 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பத்மினி ராவுத் – மெதினா வர்டா உடன் வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடி 58 வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிக்கப்பட்டது. சவுமியா சாமிநாதன் – ஃபரிஹா உடன் கருப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடி 75 வது நகர்தலில் வெற்றி பெற்றார். கோமஸ் மேரி ஆன் – தேவி சித்ரா உடன் வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடி 43 வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்திய மகளிர் 3வது அணி, ஆஸ்திரியா அணியுடன் மோதியது, 2.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ஈஷா கர்வாதே – கேத்ரினா உடன் வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடி 27வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டம் டிராவில் முடிந்தது. நந்திதா – சியாரா எதிர் போட்டியாளர் வராததால் நந்திதா வெற்றி (கருப்பு) பெற்றார். வர்ஷினி ஷாகிதி – நிகோலா உடன் வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடி 46 வது நகர்த்தலுக்குப் பிறகு இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார். பிரத்யுஷா போடா – எலிசபெத் உடன் கருப்பு நிற காய்களைக் கொண்டு விளையாடி 59 வது நகர்த்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு தயாரித்த ஆளுநர் உரை சட்டப்பேரவை இணையதளத்தில் பதிவேற்றம்!

Jayasheeba

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகிறது

G SaravanaKumar

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

G SaravanaKumar