44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் B குழுவினருக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது. பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து போட்டியில் பங்கேற்பவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தொடர்ந்து 3 வது நாளாக பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர், மகளிர் என 9 பேர் கொண்ட குழு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
B குழுவின் பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார். பயிற்சியாளர்களாக ஆடவர் அணிக்கு RB ரமேஷ், மகளிர் அணிக்கு ஸ்வப்னில் தோபட் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் பயிற்சியாளர்களாக அர்ஜுன் கல்யாண், ஸ்டேனி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரும் 18 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பயிற்சிகள் நடைபெறும் என தகவல் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.